மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு $11 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை

மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு $11 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை

2 mins read
5f491e16-74bf-4e40-82db-e03989297ed9
மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளுக்கு ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளுக்கு ஏறக்குறைய 8.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை (S$10.95 பில்லியன்) விற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேல், கத்தார், குவைத், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை அதன் மூலம் பலனடையவிருக்கின்றன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போர் தொடங்கி ஒன்பது வாரங்கள் ஆன நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு வந்துள்ளது.

கத்தாருக்குப் ‘பேட்ரியாட்’ வகை ஆகாய, ஏவுகணைத் தற்காப்பு முறை விற்கப்படும் என்று மே 1ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அதன் மதிப்பு 4.01 பில்லியன் அமெரிக்க டாலராகும். அது மட்டுமல்லாமல், இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய 992.4 மில்லியன் மதிப்புள்ள நவீன ஆயுதங்கள் கத்தாருக்கு விற்கப்படும்.

குவைத்துக்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த போர் கட்டமைப்புகளை விற்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை 992.4 மில்லியன் டாலருக்கு அமெரிக்கா விற்கவிருக்கிறது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுக்குத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் 147.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கத்தார், இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான ஆயுத விற்பனையின் ஒப்பந்ததாரர் ‘பிஏஇ சிஸ்டம்ஸ்’ என்று அமைச்சு கூறியது.

ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு முறை, ‘பேட்ரியாட்’ ஆகாய, ஏவுகணைத் தற்காப்பு முறையின் ஒப்பந்ததாரகள் ‘ஆர்டிஎக்ஸ்’, ‘லாக்ஹீட் மார்ட்டின்’ ஆகியவை ஆகும்.

குவைத்துக்கான விற்பனையில் ‘நார்த்ராம் குருமேன்’ ஒப்பந்ததாரராக உள்ளது.

குறிப்புச் சொற்கள்