ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த மாதிற்கு இழப்பீடாக US$1.2 பில்லியன் வழங்கப்பட்டது.
போலி இணையக் கணக்குகளின் மூலம் தம்முடைய அந்தரங்கமான படங்களைத் தமது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோருக்கு அனுப்பியதாகத் தமது முன்னாள் காதலனுக்கு எதிராக அந்த மாது வழக்கு தொடுத்திருந்தார்.
நீதிமன்ற ஆவணங்களில் ‘டி.எல்.’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த மாது அவரது முன்னாள் காதலன் மார்க்கஸ் ஜமால் ஜேக்சனுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
அந்தத் தம்பதி 2021ஆம் ஆண்டில் பிரிந்தனர். அதன் பிறகு அந்த மாதின் அந்தரங்கப் படங்களை சில சமூக ஊடகத் தளங்களில் காதலன் பதிவேற்றம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் பெறுவதற்கு ஜேக்சனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருக்கு வழக்கறிஞர் இருக்கிறாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

