தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக பயணிமீது காறி உமிழ்ந்து, விமானத்தின் கதவைத் திறந்து குதித்த பெண்

1 mins read
1c9fc1e4-86c8-4f32-b4bd-225f47330e77
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவில் விமானத்திற்குள் சக பயணிகளிடம் சண்டையிட்டதோடு, விமானம் நகர்ந்து கொண்டிருந்தபோது அதன் அவசரகாலப் படியைத் திறந்துவிட்டு குதித்த பெண் தண்டிக்கப்பட்டுள்ளார்.

சிந்தியா மெக்நைட் என்ற அந்த 24 வயது பெண்ணுக்கு மூன்று ஆண்டு நன்னடத்தைகால உத்தரவும் 57,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிந்தியா 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பஃபளோவில் இருந்து சிகாகோ செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது, விமானச் சிப்பந்தி அவரை கைப்பேசி பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சிந்தியா சக பயணிகளில் ஒருவரைத் தாக்கினார்; மற்றொருவர்மீது உமிழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, விமானம் நகர்ந்து கொண்டிருந்தபோது அதன் அவசரகாலப் படியைத் திறந்துவிட்டு குதித்து விமான நிலையத்தின் ஓடுபாதையில் அவர் ஓடினார்.

அதன்பிறகு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர்.

அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டு மட்டும் விமானத்தில் பயணிகள் தொல்லை தந்ததாக 2,455 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்