சைவ உணவுகளுக்கு ‘பர்கர்’, ‘சாசேஜ்’ உள்ளிட்ட அசைவம் சார்ந்த பெயர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதா? வேண்டாமா? என்ற பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியம் களமிறங்கியுள்ளது.
‘பர்கர்’, ‘சாசேஜ்’ போன்ற பெயர்கள் சைவ உணவுகளான ‘வெஜ் பர்கர்கள்’,’ வெஜ் சாசேஜ்’ ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
அசைவம் சார்ந்த உணவுகளுக்கு மட்டுமே ‘பர்கர்’, ‘சாசேஜ்’ பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று ஐரோப்பாவில் உள்ள ஆடு, மாடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இறைச்சி அல்லாத உணவுப் பொருள்களுக்கு ‘பர்கர்’, ‘சாசேஜ்’ பெயர்களை வைக்கக்கூடாது. அது வாடிக்கையாளர்களைக் குழப்பமடைய வைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பலர் அக்டோபர் மாதம் விவாதித்தனர். அசைவம் உள்ள உணவுப் பொருள்களில் ஒட்டுவில்லை அடையாளம் வைப்பது குறித்தும் அவர்கள் பேசினர்.
விவசாயிகளின் நலன் கருதி ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் சில நாடுகள் இந்தப் புதிய விதிமுறைகளுக்கு ஒத்துழைக்கவில்லை. இன்னும் சில பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று அவை குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், சைவ உணவுகளில் ‘பர்கர்’ ‘சாசேஜ்’ உள்ளிட்ட பெயர்கள் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள உணவுத் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

