கேளிக்கைக் கூடத்திற்கு வெளியில் வாகன விபத்து: நால்வர் உயிரிழப்பு

1 mins read
410218fb-9e75-4a67-bb39-72b9d63fe7f9
விபத்து நடந்த இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர், - படம்: இணையம்

மையேமி: அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள தாம்பா நகரில், நவம்பர் 8 ஆம் தேதி அதிகாலையில் கேளிக்கைக் கூட்த்தின் வாசலில் வெளியே கூட்டமாக நின்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். 

அத்துடன், 11 பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரை அலட்சியமாக ஓட்டுவதைக் கண்ட காவல்துறை, அந்தக் காரை நிறுத்த முயன்றது. 

இருந்தபோதும், சில கிலோமீட்டர் தொலைவில் நடந்த தெருப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கருதப்படும் அந்தக் கார், நிற்காமல் அதிவேகமாகச் சென்றது.  

காவல்துறை அதைப் பின்தொடர்ந்து அந்த வாகனத்தை வழிமறிக்க முயன்றபோதும் கார் நழுவியது. 

அவசரமாகச் சென்றுகொண்டிருந்த அந்தக் கார் மீதான கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்ததை அடுத்து பிரேட்ஸில் ஒன்ட் செவந்த் என்ற கேளிக்கைக் கூடத்தில்  கார் மோதியது. 

தன்பாலின ஈர்ப்புச் சமூகத்தினர் கூடும் அந்த இடத்திற்கு வெளியே நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது மோதியது.

விபத்து நடந்த இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார் என்று காவல்துறை கூறியது.

ஒன்பது பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

நவம்பர் 8 ஆம் தேதி அதிகாலையில், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்