அமெரிக்கா: தானியக்க விநியோக இயந்திரங்களை உணவு, பானம் போன்றவற்றின் விநியோகத்துக்கு மட்டுமன்றி வேறு வகையிலும் பயன்படுத்தலாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள தானியக்க இயந்திரம் ஒன்று.
சாவிகளை நகலெடுக்கும் சேவையை இது வழங்குகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் தன்வீர் ஷேக் எனும் ஆடவர் அந்த இயந்திரத்தின் மூலம் சாவியை நகலெடுக்கும் காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவேற்றியுள்ளார்.
முதலில், இயந்திரத்தின் தொடுதிரை மூலம் எந்த வகையான சாவியை நகலெடுக்க வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.
பின்னர் சாவியை அதற்கான பகுதியில் நுழைத்தால் இயந்திரம் அதன் வடிவத்தை மின்வருடி மூலம் அறிந்துகொள்ளும். அதையடுத்து, பித்தளைச் சாவி உட்பட பல்வேறு தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எத்தனை நகல்கள் வேண்டும் என்று கூறிய பிறகு இயந்திரம் சாவியை அதற்கேற்ப நகலெடுக்கிறது.
தன்வீரின் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.