வெனிசுவேலா நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,342 ஆக அதிகரிப்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,342 ஆக அதிகரிப்பு

1 mins read
08daf02c-6671-4b8d-bcf5-31d107c64d76
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பாதுகாப்புப் படைகள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகுவேஸ் கூறினார். - படம்: இபிஏ

கராக்கஸ்: வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் மாண்டோரின் எண்ணிக்கை 3,342 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரால் 16,470 பேர் காயமடைந்துள்ளதுடன், இருப்பிடம் இழந்தோரின் எண்ணிக்கை 17,345 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் 215வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகுவேஸ், அரசாங்கத்தின் மீட்பு மற்றும் துயர்துடைப்பு நடவடிக்கைகள் தாமதமாக இருந்ததாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பாதுகாப்புப் படைகள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவசரநிலை மற்றும் பேரிடர்களைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் புதிய ராணுவப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்