அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் ஆரெகன் மாநிலத்தைச் சேர்ந்த ஆடவருக்கு 1.6 பில்லியன் வெள்ளி பரிசாகக் கிடைத்தது.
அமெரிக்க வரலாற்றில் ஒருவருக்குக் கிடைத்த ஆகப் பெரிய பரிசுத் தொகையில் இது நான்காவது இடத்தைப் பெற்றது.
செங் ‘சார்லி’ சேப்பான் என்ற அந்த 46 வயது ஆடவர் தனக்குக் கிடைத்த மாபெரும் பரிசுத் தொகையைத் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கும் பிரித்துக்கொடுத்துள்ளார்.
பரிசுத் தொகை வெல்வதற்கு முன்னர் அந்த ஆடவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
“எத்தனை ஆண்டுக்காலம் வாழப்போகிறேன் என்று தெரியவில்லை, இத்தனை பணத்தை எப்படி என்னால் செலவு செய்ய முடியும்,” என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சார்லியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. தனக்குக் கிடைத்த பரிசுத்தொகை மூலம் அவர் சிறப்பான மருத்துவம் பெற்றார். இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் உடல்நலம் எதிர்பார்த்த அளவு தேறவில்லை.
அதேநேரம், தனது வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு முன் நல்ல வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணிய சார்லி சொகுசு வீடு, சொகுசு கார்களை வாங்கினார்.
இந்நிலையில், சார்லியின் உடல்நலம் மோசமடைந்துள்ளது. அவர் இன்னும் நான்கு மாதங்களில் உயிரிழந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
லாவோஸில் பிறந்த சார்லி அகதிகள் முகாமில் வளர்ந்தவர்.
தற்போது பணத்தைப் பற்றிக் கவலை இல்லை, குடும்பத்திற்குத் தேவையான அனைத்தும் செய்துவிட்டேன் என்றார் சார்லி.
சார்லி தனது எஞ்சிய காலத்தில் உதவி தேவைப்படும் தாய்லாந்து சமூகத்திற்கும் வேண்டியதைச் செய்து வருகிறார்.

