காப்பிக் கடையில் காணொளி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேலியப் பிரதமர்

காப்பிக் கடையில் காணொளி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேலியப் பிரதமர்

1 mins read
65af8af3-5520-46e6-a1f2-b05fe619df6a
காப்பிக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட காணொளியில் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு மகிழ்ச்சியாகக் கடை ஊழியர்களிடம் உரையாடுகிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தாம் உயிருடன் இருப்பதைக் காட்டும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் நடத்திய தாக்குதலில் திரு நெட்டன்யாகு உயிர் இழந்துவிட்டதாக அண்மையில் சில வதந்திகள் வெளியாகின. மேலும் சில நாள்களுக்கு முன்னர் அவர் பேசிய காணொளி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. நெட்டன்யாகுவுக்கு எப்படி ஆறு விரல்கள் உள்ளன எனப் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் திரு நெட்டன்யாகு தமது சமூக ஊடகப் பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காப்பிக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட காணொளியில் அவர் மகிழ்ச்சியாகக் கடை ஊழியர்களிடம் உரையாடுகிறார். பின்னர் தமக்கு ஆறு விரல்கள் இல்லை என்றுகூறிக் கையை நன்றாக அசைத்துக் காட்டுகிறார்.

குறிப்புச் சொற்கள்