தவறான முகவரிக்குச் சென்று ஆடவரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்ற காட்சி பதிவு

தவறான முகவரிக்குச் சென்று ஆடவரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்ற காட்சி பதிவு

1 mins read
78cd7191-4426-48a9-8424-41d70b4eda64
சம்பவ இடத்தில் காவல்துறையினர். படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் தவறான முகவரிக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கு ஓர் ஆடவரைச் சுட்டுக்கொன்றது காணொளியில் பதிவாகியுள்ளது. ஃபார்மிங்டன் நகரக் காவல்துறையினர் அந்தக் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

ஒரு வீட்டில் குடும்ப வன்முறை இடம்பெறுவதாகக் காவல்துறைக்குப் புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் தவறான வீட்டுக்குச் சென்றனர்.

தாங்கள் செல்லவேண்டிய முகவரியை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் வீட்டில் இருந்த ஆடவருடன் பேசினர். சிறிது நேரம் கழித்து ஆடவர் அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கியை நீட்டியதும் அதிகாரிகள் உடனடியாக அவரைச் சுட்டதும் காணொளியில் பதிவானது.

ராபர்ட் டாட்சன் என்ற அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.