விமானச் சேவைகளில் மாற்றம் செய்கிறது வியட்ஜெட்

விமானச் சேவைகளில் மாற்றம் செய்கிறது வியட்ஜெட்

1 mins read
2688cfba-a452-4d6b-aa7d-9306726282c4
வியட்ஜெட், அதன் 64 அனைத்துலகப் பயணப் பாதைகளிலும் சேவைகளைத் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளது. ஆயினும் சில சேவைகளின் எண்ணிக்கையை அது குறைக்கவிருக்கிறது. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாமின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட், அதன் சேவைகளில் மாற்றங்களைச் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வியட்ஜெட், அதன் 64 அனைத்துலகப் பயணப் பாதைகளிலும் சேவைகளைத் தொடரப்போவதாகத் தெரிவித்தது. ஆயினும் சில சேவைகளின் எண்ணிக்கையை அது குறைக்கவுள்ளது. சேவைகளில் செய்யப்பட்டும் மாற்றங்களுக்கு உத்தேச எரிசக்திப் பற்றாக்குறையை அது காரணம் காட்டியது.

எரிசக்தியைப் பொறுத்தவரை இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கிறது வியட்னாம். மத்திய கிழக்குப் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது; எரிபொருள் விலைகள் கூடியுள்ளன. அவற்றைச் சமாளிக்கப் போராடிவருகிறது ஹனோய்.

“எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில், செயல்பாடுகள் நிலையாகத் தொடர்வதை உறுதிசெய்யச் சேவைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம்,” என்று வியட்ஜெட் கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்குச் சேவை மாற்றங்கள் குறித்துத் தெரியப்படுத்திவிட்டதாக அது சொன்னது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, தேசிய விமான நிறுவனமான வியட்னாம் ஏர்லைன்சும் உள்நாட்டு விமானச் சேவைகளை ரத்துச் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்