பற்பசை பிதுக்கு குழாய்களில் போதைப்பொருள் கடத்தல்; 65 பேர் கைது

பற்பசை பிதுக்கு குழாய்களில் போதைப்பொருள் கடத்தல்; 65 பேர் கைது

1 mins read
92679c6b-72c1-45f9-824d-69755e044e74
பற்பசை பிதுக்கு குழாய்களில் போதைப்பொருள் கடத்தப்பட்டது. படம்: சுங்கத்துறை -

வியட்னாமிற்குள் 50 கிலோகிராம் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 65 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள்களில் சில, பற்பசை பிதுக்கு குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிபிசி ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து வியட்னாமின் ஹோ சி மின் நகருக்கு விமானப் பயணம் மேற்கொண்ட அவர்கள், பயணப்பைகளில் பற்பசை பிதுக்கு குழாய்களை வைத்திருந்தனர்.

பற்பசை பிதுக்கு குழாய்களைத் தூக்கிச்செல்ல தாங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் பணியாளர்கள் கூறினர். ஆனால், அவற்றில் போதைப்பொருள் இருந்தது பற்றித் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் கூறினர்.

பிடிபட்டவர்களில் பெண்கள் நால்வர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.