வியட்னாம், பிலிப்பீன்சுக்கு ‘மேல் நடுத்தர வருவாய் நாடு’ தகுதி

வியட்னாம், பிலிப்பீன்சுக்கு ‘மேல் நடுத்தர வருவாய் நாடு’ தகுதி

1 mins read
9b55d5e4-e974-46bf-9540-b7bbe71e2159
2025ஆம் ஆண்டு நிலவரப்படி, வியட்னாமின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் 4,970 அமெரிக்க டாலராகவும் ($6,435) பிலிப்பீன்சின் வருமானம் 4,850 அமெரிக்க டாலராகவும் உயர்ந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பல ஆண்டுகளாகப் பொருளியல் வளர்ச்சியில் அடைந்த அதிவேக முன்னேற்றத்தைத் தொடர்ந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளை ‘மேல் நடுத்தர வருவாய் நாடுகள் பட்டியலுக்கு உலக வங்கி உயர்த்தியுள்ளது.

உலக வங்கியின் இந்த முக்கிய தகுதி உயர்வு, இரு நாடுகளின் மீதான அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய அறிவிப்பின் மூலம், தென்கிழக்காசியாவின் ஐந்து முக்கியப் பொருளியல் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்னாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய அனைத்தும் தற்போது மேல் நடுத்தர வருவாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தகுநிலையை எட்டியுள்ளன.

2025ஆம் ஆண்டு நிலவரப்படி, வியட்னாமின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் 4,970 அமெரிக்க டாலராகவும் ($6,435) பிலிப்பீன்சின் வருமானம் 4,850 அமெரிக்க டாலராகவும் உயர்ந்துள்ளது.

இது உலக வங்கி நிர்ணயித்துள்ள தகுதி வரம்பான 4,636 அமெரிக்க டாலரைவிட அதிகமாகும். வியட்னாமின் ஏற்றுமதி சார்ந்த பொருளியல் மாதிரியையும் பிலிப்பீன்சில் அனைத்து முக்கியத் தொழில்துறைகளிலும் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பொருளியல் மாற்றத்தையும் சுட்டிக்காட்டி உலக வங்கி இந்தத் தகுதி உயர்வை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்வியட்னாம்வருவாய்உலக வங்கி

தொடர்புடைய செய்திகள்