மின்சிகரெட்டுக்கு எதிராக வியட்னாம் கடுமையான நடவடிக்கை

1 mins read
208bb1e9-8940-4a61-b973-ffb655aa68fc
மின்சிகரெட்டுகள் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹனோய்: வியட்னாம் அரசாங்கம் மின்சிகரெட்டுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

மின்சிகரெட் மற்றும் அதன் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தத் தங்களது இடங்களில் அனுமதி வழங்கும் தனிநபர்களுக்கு 490 வெள்ளி (10 மில்லியன் டாங்) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனங்களுக்கு 1,000 வெள்ளி (20 மில்லியன் டாங்) அபராதம் விதிக்கப்படும்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குபவர்களைக் குறிவைத்துப் பல அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வியட்னாமிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்சிகரெட் மற்றும் அதன் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 245 வெள்ளி (5 மில்லியன் டாங்) வரை அபராதம் விதிக்கப்படும்.

அதிகாரிகளுக்கு மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்து அவற்றை அழிக்கவும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மின்சிகரெட்டுகளில் நிக்கோடின் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையர்களிடையே மின்சிகரெட்டுகள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்ததை அடுத்து வியட்னாம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

மின்சிகரெட்டுகள் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்