ஹனோய்: வியட்நாமின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான டுருஓங் மை லான் பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் லான் தமது பெரும்பாலான சொத்துகளை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை லான் வெளி நாடுகளுக்கு மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத பணமாற்றம் குறித்து விசாரணை நடத்தியுள்ளதாகவும் வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லான் எந்தெந்த நாடுகளுக்கு பணத்தை மாற்றியுள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
லான் 12 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் நிதி மோசடி செய்தது ஏப்ரல் மாதம் நிரூபணமானது.