வியட்னாமின் மக்கள்தொகை 2059ல் உச்சத்தைத் தொடும்

1 mins read
2a022324-afd1-45ce-abc4-c9c24ea0ae2d
வியட்னாமின் மக்கள் தொகை நூற்றாண்டின் மத்தியில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: வியட்னாமின் மக்கள்தொகை 2059ஆம் ஆண்டுவாக்கில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் வளர்ச்சி மெதுவடையும், மூப்படையும் மக்கள்தொகை அதிகரிக்கும், இடம்பெயர்வு முறை மாற்றமடையும்.

டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணிப்புகளில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்துடன் ஒருங்கிணைந்து, பொதுப் புள்ளிவிவர அலுவலகம் நடத்திய பயிலரங்கில் இந்தக் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.

இது, அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மற்றும் 53 இனக்குழுக்களில் சமூக-பொருளியல் நிலவரங்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

நாட்டின் நடுத்தர கருவுறுதல் சூழ்நிலையில், வியட்னாமின் மக்கள்தொகை பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து, நூற்றாண்டின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மெதுவான வளர்ச்சி அல்லது நிலைத்தன்மையை நோக்கி நாடு பயணிக்கும்.

மேலும் மூப்படைவோர் அதிகரித்து 2059ல் வியட்னாமின் மக்கள்தொகை உச்சத்தில் இருக்கும்.

2024 முதல் 2074 வரையிலானக் காலகட்டத்தில் மக்கள்தொகை 114 மில்லியனுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கருவுறுதல் போக்குகளைப் பொறுத்து இது கணிசமாக மாறுபடும்.

குறிப்புச் சொற்கள்