தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானில் பறவை போல் பறந்த சோஃபா (காணொளி)

1 mins read
cb0a2e20-2b53-44c3-b658-16264329e969
படம்: டுவிட்டர் -

துருக்கியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் அன்காரவில் மே 17ஆம் தேதி திடீரென வீசிய சூறாவளியால் சோஃபா ஒன்று வானில் பறவை போல் பறந்து சென்றது.

அது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவியது.

கிட்டத்தட்ட 35 மாடி உயரத்தில் பறந்த அந்த சோஃபா ஒரு கட்டடத்தில் மோதி கீழே விழுந்தது.

சம்பவத்தில் யாரேனும் காயமடைந்தார்களா என்பது குறித்து எந்த தகலும் இல்லை.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

தமது 50 ஆண்டு வாழ்க்கையில் இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்று ஒருவர் டுவிட்டரில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்