அரும்பொருளகத்தில் $56,000 மதிப்புள்ள சிலை உடைப்பு

அரும்பொருளகத்தில் $56,000 மதிப்புள்ள சிலை உடைப்பு

1 mins read
901006cd-a36d-433f-87e9-b7a5819670b1
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் மயாமி நகரில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் 56,000 வெள்ளி மதிப்புள்ள நாய்ச் சிலை தவறுதலாகத் தட்டிவிடப்பட்டு உடைந்து சிதறியது.

'ஆர்ட் வைன்வுட்' எனும் அரும்பொருளகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சிலையைத் தட்டிவிட்டவர் சிறப்பு விருந்தினராக ஓர் உயரதிகாரி.

சிலையை உருவாக்கியவர் புகழ்பெற்ற அமெரிக்க கலைஞர் ஜெஃப் கூன்ஸ்.

உடைந்த நீல நிறச் சிலை மிகவும் புகழ்பெற்ற சிலைகளில் ஒன்றாகும்.

சிலையை அதிகாரி தொட்டு, தட்டிப்பார்த்துக் கொண்டிருந்தபோது அது கீழே விழுந்து உடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

நாய்ச் சிலை அழகுப்பொருள்களில் ஒன்று என்று நினைத்து அதை தொட்டுப்பார்த்ததாக அந்த அதிகாரி கூறினார்.

அதிகாரி வேண்டுமென்றே சிலையைத் தட்டிவிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.