100,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வாகன் திட்டம்

100,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வாகன் திட்டம்

1 mins read
நான்கு தொழிற்சாலைகளை மூடவும் திட்டம் என ஜெர்மானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
9e075eee-8758-4e9e-bc7a-98e4d2ca2509
ஒட்டுமொத்தக் குழுமமும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் என்று கூறிய வோக்ஸ்வாகன் செய்தித் தொடர்பாளர், ரகசிய ஆவணங்கள் குறி்த்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெர்லின்: வோல்ஸ்வாகன் வாகன உற்பத்தி நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் கிட்டத்தட்ட 100,000 வேலைகளைக் குறைக்கவும், ஜெர்மனியிலுள்ள அதன் நான்கு தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனியின் ‘மேனேஜர் மேகசின்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் முதலீட்டை 15 விழுக்காடு குறைத்து, ஏறத்தாழ 130 பில்லியன் யூரோக்களாக மாற்ற அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் ப்ளூம் திட்டமிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களின் போட்டி, சுங்கவரிக் கொள்கைகள், மின்சார வாகன மாற்றத்திற்கான அதிக செலவுகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தக் குழுமமும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் என்று கூறிய வோல்ஸ்வாகன் செய்தித் தொடர்பாளர், ரகசிய ஆவணங்கள் குறி்த்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்