ஷேக் ஹசினாவுக்கு எதிராகக் கைது ஆணை

1 mins read
c3b1533c-5bb5-48e4-b321-4d99de249eb9
பங்ளாதேஷின் முன்னாள் அதிபர் ஷேக் ஹசினா. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: அண்மையில் பங்ளாதேஷில் மாணவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட புரட்சியின் காரணமாக ஆட்சி அதிகாரத்தை ஷேக் ஹசினா இழந்தார்.

அதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இந்நிலையில், பங்ளாதேஷின் முன்னாள் அதிபரான ஷேக் ஹசினாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசினாவைக் கைது செய்து நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாட்டி ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சியின்போது மனித உரிமை விதிமீறல்கள் தொடர்பாகப் பல புகார்கள் செய்யப்பட்டன.

தமது அரசியல் எதிரிகளைத் தடுத்து வைத்ததாகவும் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

77 வயது திருவாட்டி ஹசினாவுக்கு இந்தியா அடைக்கலம் தந்திருப்பது பங்ளாதேஷைப் கோபப்படுத்தியுள்ளது.

திருவாட்டி ஹசினாவின் அரசதந்திரக் கடப்பிதழை பங்ளாதேஷ் ரத்து செய்துள்ளது.

திருவாட்டி ஹசினா, பங்ளாதேஷிலிருந்து தப்பிச் சென்றதை அடுத்து, அவரைப் பொது இடங்களில் யாரும் இதுவரை பார்த்ததில்லை.

அவர் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அருகில் உள்ள ராணுவ விமான முகாமில் தங்கியதாக ஆகக் கடைசியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்