கட்டுக்குள் வந்த வாஷிங்டன் காட்டுத்தீ

கட்டுக்குள் வந்த வாஷிங்டன் காட்டுத்தீ

1 mins read
கனடாவில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ, 18,000 பேர் வெளியேற்றம்
a63bd900-ae51-45e6-862e-821ee5b53a3e
காட்டுத் தீயில் எரிந்துபோன தங்களது வீட்டை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) பார்வையிடும் பாட்சி சோசாமேன், லாரி சோசாமேன் - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஸ்போக்கேன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் நகருக்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மூன்று காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிட்டத்தட்ட 1,700 தீயணைப்பு வீரர்கள் போராடி மேலும் பரவாமல் தடுத்துள்ளனர். எனினும், தீயினால் 10,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் கருகின. 900க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.

தீ மோசமான நிலையில், ஏறத்தாழ 64,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது ஆபத்தான பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் உள்ள மக்களை கட்டாயமாக வெளியேற்றும்உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் உயிரிழப்போ, பலத்த காயங்களோ ஏற்படவில்லை.

தீவைத்த குற்றத்திற்காக ஆரோன் ஃபாரினாசி, 37, என்ற உள்ளூர்வாசி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து 10,300 ஹெக்டேர் நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது. அதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஏறக்குறைய 18,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்