கோலாலம்பூர்: அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவதற்கான முயற்சிகளை மலேசியா எடுத்துவருகிறது.
அதன் மூலம் சுழற்சிப் பொருளியலாக உருவெடுப்பது அந்நாட்டின் இலக்காகும். அந்த வகையில், ஜப்பானின் குப்பைப் பிரிப்பு (waste seperation), மறுசுழற்சி நடைமுறைகளை ஆராய மலேசியா எண்ணம் கொண்டுள்ளது.
கழிவை ஆக்ககரமான முறையில் கையாள்வதில், குறிப்பாக குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிப்பதில், ஜப்பானுக்கு இருக்கு அனுபவம் மலேசியாவுக்கு நல்ல பாடங்களை அளிக்கக்கூடும் என்று மலேசிய வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் கா கோர் மிங் கூறியுள்ளார்.


