தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 படங்களைப் பார்த்தால் $1,300 வெல்லும் வாய்ப்பு

1 mins read
23c0ab42-a3e0-418b-a21e-0ac5c99e8840
படம்: ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸ் -

ஹாலிவுட் அதிரடி திரைப்படமான ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸின் 10 படங்களையும் பார்த்து ஒரு தகவலைத் தந்தால் கிட்டத்தட்ட 1,300 வெள்ளி தருவதாக பைனாஸ்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த 10 படங்களைப் பார்க்க கிட்டத்தட்ட 20 மணி நேரம் செலவாகும்.

படத்தைப் பார்ப்பவர் படத்தில் கார்கள் விபத்தில் ஈடுபடும் காட்சிகள் வரும் போது அதன் சேத மதிப்பை கணிக்கிட வேண்டும்.

ஒவ்வொரு படத்திற்கும் சேத மதிப்பை அவர் கொடுக்க வேண்டும்.

எந்தக் கார் விபத்தில் சிக்குகிறது, அதனால் எவ்வளவு சேதம் விளைகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸின் 10ஆவது படமான ஃபாஸ்ட் எக்ஸ் படமும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

சேத அளவை சரியாக கணிப்பவருக்கு 1,300 வெள்ளி தரப்படும் என்றும் வெற்றியாளர்கள் மே 26ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸின் முதல் படம் 2001ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அது 10ஆவது படமான 'ஃபாஸ்ட் எக்ஸ்'ஐ மே 19ல் வெளியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஹாலிவுட்