நிரந்தர ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை: லெபனான் அதிபர்

நிரந்தர ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை: லெபனான் அதிபர்

1 mins read
83c8c677-7eb1-4c3b-a331-63bd16e8581d
தொலைக்காட்சிவழி தமது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் லெபனான் அதிபர் ஜோசஃப் அவோன். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

பெய்ரூட்: நிரந்த ஒப்பந்தங்களை எட்டுவதற்கான கட்டத்தில் தமது நாடு இருப்பதாக லெபனான் அதிபர் ஜோசஃப் அவோன் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து அறிவித்த மறுநாள் திரு அவோன் லெபனான் மக்களிடம் தொலைக்காட்சிவழி உரையாற்றினார். லெபனான், இனி யாருடைய போருக்கான தளமாக இருக்காது என்று அவர் எடுத்துரைத்தார்.

முந்தைய ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகக் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி ஹிஸ்புல்லா, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போரில் லெபனானும் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது.

அதனையடுத்து இஸ்ரேல், லெபனானைப் பலமுறை தாக்கியதோடு நிலத்தின்மீதும் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 2,300 பேர் கொல்லப்பட்டனர், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

“இப்போது புதிய கட்டத்தைச் சந்திக்கவிருக்கிறோம்,” என்று திரு அவோன் சொன்னார். போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் தமது நாட்டு மக்களிடம் பேசினார்.

“இது, நமது மக்களின் உரிமைகளையும் நமது மண்ணின் ஒற்றுமையையும் நமது நாட்டின் தன்னாட்சி முறையையும் பாதுகாக்கும் நோக்கில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதிலிருந்து நிரந்தர ஒப்பந்தங்களை எட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கும் காலத்துக்கு மாறிக்கொள்ளும் கட்டமாகும்,” என்றார் திரு அவோன்.

குறிப்புச் சொற்கள்
உலகம்லெபனான்இஸ்ரேல்டோனல்ட் டிரம்ப்