டெஹ்ரான்: பல வாரங்களாக நடந்த போரில் ஈரான் களத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றும், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதால்தான் அமெரிக்காவுடனான தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஈரானிய நாடாளுமன்ற நாயகர் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 18) தெரிவித்தார்.
இரண்டு வார காலப் போர் நிறுத்தம் புதுப்பிக்கப்படாவிட்டால் அது வரும் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் வலியுறுத்தி வரும் நிரந்தர ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதோடு, முக்கியப் பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
“நாங்கள் களத்தில் வெற்றி பெற்றுள்ளோம்,” என்று ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பகேர் காலிபாஃப் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் கூறினார். மேலும், அமெரிக்கா தனது இலக்குகளை அடையவில்லை என்றும் ஹோர்முஸ் நீரிணை கடல்வழிப் போக்குவரத்துப் பாதை ஈரானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அமெரிக்கா எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால்தான் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்,” என்றார் அவர்.

