21 நாள்களுக்குள் ஈரான் போரை முடிப்போம்: டிரம்ப்

21 நாள்களுக்குள் ஈரான் போரை முடிப்போம்: டிரம்ப்

1 mins read
b6f5d8ac-6402-433d-ba83-90ed8235ee65
இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரானுடனான போரை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

வாஷிங்டன்: இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரானுடனான போரை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (மார்ச் 31) இத்தகவலை வெளியிட்ட டிரம்ப், ‘‘நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம். இந்த வெளியேற்றம் ஒருவேளை இரண்டு வாரங்களுக்குள், அல்லது மூன்று வாரங்களில் நடைபெறலாம்,’’ என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் போக்கால் மத்திய கிழக்கு நாடுகள் நிலைகுலைந்துவிட்டன.

பங்குச்சந்தை முதல் எரிசக்தி சந்தைகள் வரை பலவும் சீர்குலைந்துவிட்டது.

போர் பதற்றத்தால் தொழில்துறைகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில், ஒரு மாத காலப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் தாம் உத்தேசித்துள்ளதாக, டிரம்ப் கூறியுள்ளது, அனைத்துலக அளவில் காணப்படும் பதற்றமான சூழலைச் சற்றே தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று டிரம்ப் மேலும் கூறினார்.

‘‘இதற்காக ஈரான் என்னுடன் எந்தவொரு உடன்பாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, இந்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனை என்னவென்றால், ஈரான் விரைவில் அணுவாயுதம் அற்ற நாடாக மாற வேண்டும். அத்தகைய கற்காலத்திற்குள் ஈரான் தள்ளப்பட வேண்டும். அதன் பிறகு நாங்கள் புறப்படுவோம்,” என்று டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்