ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் சனிக்கிழமையன்று (ஜனவரி 24) நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனீசிய அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (ஜனவரி 26) தெரிவித்தனர்.
ஏறத்தாழ 73 பேரைக் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.
பண்டோங் பாராட் வட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்பு கனமழை பெய்தது.
கனமழை தொடரக்கூடும் என்று இந்தோனீசிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
30க்கும் அதிகமான வீடுகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த வாரம் இந்தோனீசியாவின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாகப் பலருக்குத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

