மேற்கு ஆஸ்திரேலியாவில் கடும் வெப்ப அலை குறித்த எச்சரிக்கை

1 mins read
6482f571-1332-4ad1-8e14-e10bcc48c232
2023 டிசம்பரில் வெப்ப அலை தாக்கியபோது ஆஸ்திரேலியர்கள் கடற்கரைக்குப் படையெடுத்துச் சென்றனர். - கோப்புப்படம்: இபிஏ

சிட்னி: கடும் வெப்ப அலை மேற்கு ஆஸ்திரேலியாவின் சிற்சில பகுதிகள் தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

இதனால் மாநிலத்தில் காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

வெப்பநிலை இந்த வார இறுதியில் 45 டிகிரி செல்சியஸ் மேல் போகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதத்தில் அதிகபட்சம் எதிர்பார்க்கப்படும் சராசரி வெப்பநிலை 41 டிகிரியாக இருக்க, பெர்த் நகரில் 47ஐ எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீச் சம்பவங்களைச் சமாளிக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் போராடியதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்