மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி 100வது வயதில் காலமானார்

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி 100வது வயதில் காலமானார்

கோப்புப் படம்: என்எஸ்டி

28 Sep 2026 - 10:56 am

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியான டாக்டர் சிட்டி ஹஸ்மா அலி, 100, கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை நிலையத்தில திங்கட்கிழமை (செப்டம்பர் 28) காலமானார்.

அவரது மறைவை அவரது மகனான மொக்சானி மகாதீர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தினார்.

1926 ஜூலை 12 அன்று சிலாங்கூரில் உள்ள கிள்ளான் பகுதியில் பிறந்த சிட்டி ஹஸ்மா மலேசியாவின் தொடக்கக்கால மலாய் பெண் மருத்துவர்களில் ஒருவராவார்.

அவர், மருத்துவம், பொதுச்சுகாதாரம், சமூகப் பணிகளில் நீண்ட காலம் சேவையாற்றினார்.

சிங்கப்பூரில் இருந்த ஏழாவது எட்வர்ட் அரசர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர்1955ல் பட்டம் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சில் இணைந்த பிறகு, கெடா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ அதிகாரியாக அவர் பணியாற்றினார். தாய்-சேய் நலன் மற்றும் பொதுச்சுகாதாரத்திலேயே இவரது கவனம் அதிகம் இருந்தது.

சிட்டி ஹஸ்மா 1956ல் டாக்டர் மகாதீரை முகமதுவை மணந்தார்.

இந்தத் தம்பதியருக்கு சமூகச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான மரினா மகாதீர், கெடா மாநில முன்னாள் முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீர் உட்பட ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மகாதீர்மலேசியாபிரதமர்