மலேசியாவில் கார்மீது கொள்கலன் விழுந்ததில் மாது மரணம்

1 mins read
0b9a7d1a-d25b-4b8f-b671-5d10e41fee70
விபத்தினால், சாலைகளின் இரு தடங்களும் தற்காலிமாகத் தடைப்பட்டன. - படம்: தி ஸ்டார்/ ஏசியா நியூஸ் நெட்வொர்க்

புக்கிட் மெர்தாஜாம்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் தெங்காவில், ட்ரெய்லர் லாரி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த கொள்கலன் ஒன்று காரின்மீது விழுந்ததில் மாது ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவர், 21 வயது லீ ஸி ரூ என்று அடையாளம் காணப்பட்டார்.

அந்த மாது போக்குவரத்து விளக்கில் காத்திருந்தபோது, எதிர்புறத்திலிருந்து வந்த லாரி திடீரென இடது பக்கம் திரும்பியது.

இதன் காரணமாக, கொள்கலன் மாதின் கார்மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் காரில் தனியாக இருந்தார் என்றும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தினால், சாலைகளின் இரு தடங்களும் தற்காலிமாகத் தடைப்பட்டன.

மற்ற சில வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்த மற்றோர் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததற்கு முன்னரே, காயமடைந்த ஓட்டுநரை வழிப்போக்கர்கள் மீட்டனர்.

மலேசியக் காவல்துறை சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்