காரைப் பின்னால் இயக்கிய கணவர்; பெண் உயிரிழப்பு

காரைப் பின்னால் இயக்கிய கணவர்; பெண் உயிரிழப்பு

1 mins read
d9ba3d96-cc42-4e4d-aff7-0ed2cb8ddf6a
கணவர் காரை பின்னால் இயக்கியதில் எதிர்பாராதவிதமாக பெண் மாண்டுபோனார். படம்: வாசகர் -

கணவர் காரை பின்னால் இயக்கியதில் எதிர்பாராதவிதமாக பெண் மாண்டுபோனார். மலேசியாவின் தாமன் சிலாசிஹ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது.

கணவன், மனைவி இருவரும் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது என்றும் குலிம் மாவட்ட காவல்துறை அதிகாரி சொன்னார்.

வீட்டிற்குள் சென்று எதையோ எடுத்து வருவதற்காக அப்பெண் காரில் இருந்து இறங்கினார். அப்போது, கணவர் எதிர்பாராதவிதமாக காரைப் பின்னால் இயக்கியதில் அப்பெண்மீது கார் மோதியது.