கைப்பேசியை மின்னூட்ட உறைகலனைச் செயலிழக்கச் செய்த பெண்; கடைக்காரருக்கு இழப்பு

கைப்பேசியை மின்னூட்ட உறைகலனைச் செயலிழக்கச் செய்த பெண்; கடைக்காரருக்கு இழப்பு

படம்: எஃப்எம்கொரியா

13 Oct 2026 - 6:11 pm

1 mins read

சோல்: தென்கொரியாவில் ஊழியரில்லாத் தானியங்கி பனிக்கூழ் கடை ஒன்றில், பெண் ஒருவர் தமது கைப்பேசியை மின்னூட்ட கடையில் இருந்த உறைகலனின் மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றதால், அங்கிருந்த பனிக்கூழ் உருகி வீணாயின.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது மனக்குமுறலை அங்காடி உரிமையாளர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், கடையில் ஒட்டப்பட்டிருந்த ஓர் அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அந்த அறிவிப்புப் பலகையில், கடையின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் பெண் ஒருவர் உறைகலன் மீது தமது கைப்பேசியை வைத்து மின்னூட்டியது தெளிவாகத் தெரிகிறது.

“வியாபாரத்திற்கு இடையூறு விளைவித்ததற்காகக் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. கைப்பேசியை மின்னூட்ட உறைகலனின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், உருகிய பனிக்கூழ்களை இனி விற்பனை செய்ய முடியாது. அவை அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டியதாயிற்று,” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோன்றதொரு சம்பவம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கியொங்கி மாநிலத்தில் புச்சியோன் நகரில் நடைபெற்றது. அங்குள்ள ஓர் ஊழியரில்லா தானியங்கி பனிக்கூழ் கடையில் 60 வயது பெண் ஒருவர் உறைகலன் மின் இணைப்பைத் துண்டித்ததால், ஏறத்தாழ 500,000 வான் (S$477) மதிப்புள்ள பனிக்கூழ் உருகி வீணாயின. அந்தப் பெண் ஏற்கெனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதால் அவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாபனிக்கூழ்கைப்பேசிமின்னூட்டம்