மரணமடைந்துவிட்டதாக நம்பவைக்க செய்யப்பட்ட கொலை

மரணமடைந்துவிட்டதாக நம்பவைக்க செய்யப்பட்ட கொலை

1 mins read
e5bc0d62-ce2f-48cd-b5b0-4bce4d77b5b4
அல்ஜீரியரான 23 வயது கதிஜா ஓ கொல்லப்பட்டார். படம்: கதிஜா2299/டிக்டாக் -

தோற்றத்தில் தம்மைப்போல ஒரே மாதிரியான சாயலைக் கொண்ட ஒரு பெண்ணை ஈராக்கிய வம்சாவளிப் பெண் ஒருவர் கொன்றதாக ஜெர்மானிய காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாக தலைமறைவாகத் திட்டமிட்ட 23 வயது ஷரபான் கே, தாம் மரணமடைந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதற்காகவே, உருவ ஒற்றுமை உள்ள பெண்ணை சமூக வலைத்தளம் மூலம் அழகுக்கலை நிபுணரான ஷரபான் தேடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அழகு சாதனப் பொருள்களைத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாகக் கூறி ஷரபான் செய்த விளம்பரத்தை நம்பி அல்ஜீரியரான 23 வயது கதிஜா ஓ அவரைச் சந்தித்தார். ஷரபானும் அவருடன் இருந்த ஆடவர் ஒருவரும் கதிஜாவை காரில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்று அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கதிஜாவின் உடலில் 50 கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன.

அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மரபணுச் சோதனை மூலம் ஷரபானின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. ஷரபானுக்கும் அவருடன் இருந்த ஆடவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.