தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுக்கு 720% வட்டி வசூலித்த பெண் கடன் முதலை கைது

1 mins read
ba308174-31f7-4b3b-b6d6-35a4757ee073
கடனைத் திருப்பித் தராதோரை, வன்முறை கொண்டு மிரட்டியும் உள்ளார் 42 வயதுடைய அந்தப் பெண். - படங்கள்: கவ்சொட்

பேங்காக்: தன்னிடம் கடன் வாங்கியோரிடமிருந்து 42 வயது தாய்லாந்து பெண் ஒருவர், ஆண்டுக்கு 720% வட்டி வசூலித்து வந்ததை அடுத்து டிசம்பர் 21ஆம் தேதி அப்பெண் கைது செய்யப்பட்டார்.

கிராபி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் மூன்றாண்டுகளாக இவ்வாறு செய்து வந்ததாக ‘கவ்சொட்’ செய்தி வெளியிட்டது.

உரிமமின்றி அதிக வட்டி விகிதத்துடன் கடன் தருவதற்காகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் குறிவைத்து வரும் நிலையில், கடன் வாங்குமாறு இணையவாசிகளுக்கு அழைப்பு விடுத்த ஒரு ஃபேஸ்புக் பயனாளர் பற்றி அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.

விசாரணையை அடுத்து போதுமான ஆதாரத்தையும் வாக்குமூலத்தையும் திரட்டி, பெண்ணுக்கு எதிராகச் சோதனையிடும் ஆணையை அதிகாரிகள் கோரினர். அதன் மூலம் கடன் முதலையை சிக்க வைத்தனர் அதிகாரிகள்.

கைதான அந்தப் பெண், உள்ளூர்வாசிகளுக்குக் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகக் கடன் அளித்து வருவதைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஒரு வாரத்திற்கு 20%, ஒரு மாதத்திற்கு 60%, ஓராண்டுக்கு 720% என வட்டி வசூலித்து வந்ததாக அந்தப் பெண் காவல்துறையினரிடம் கூறினார்.

கடனைத் திருப்பித் தராதோரை, வன்முறை கொண்டு மிரட்டியும் உள்ளார் அவர்.

தாய்லாந்தில் வங்கி அல்லாத கடன் அளிக்கும் தரப்புகள், ஆண்டுக்கு 36% வட்டி வசூலிப்பதாக ‘த நேஷன்’ குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்