விமானத்தில் ஏறியவுடன் இளம் பெண் ஆட்டம்

விமானத்தில் ஏறியவுடன் இளம் பெண் ஆட்டம்

1 mins read
1d0677df-c534-4a8c-a38e-caa0ee0046ab
விமானத்தில் ஏறியவுடன் இந்தப் பெண் ஆடத் தொடங்கிவிட்டார். படம்: இன்ஸ்டகிராம் -

விமானத்தில் ஏறியவுடன் இருக்கையில் அமர்வதற்கு முன் இளம் பெண் ஒருவர் நடைபாதையில் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

அவருக்குப் பின்னால் நிற்கும் பயணிகள், அந்தப் பெண் நடனமாடி முடிப்பதற்காக காத்திருப்பது காணொளியில் தெரிகிறது.

இந்தக் காணொளியை இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இன்ஸ்டகிராமில் இது 700,000 விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.

எனினும், இந்தப் பெண்ணின் செயல் குறித்து இணையவாசிகள் விமர்சிக்கவும் செய்கின்றனர். இவருடைய ஆட்டம், மற்ற பயணிகள் அவர்களது இருக்கைகளில் அமர்வதற்கு இடையூறாக விளங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.

"இந்தப் பெண் முதன்முறையாக விமானத்தில் ஏறுவதுபோல தெரிகிறது," என்றார் இணையவாசி ஒருவர்.

"இந்த விமானம் பொதுமக்களுக்கானது. இது உங்களுடைய வீடு அல்ல," என்று மற்றொருவர் பதிவிட்டார்.

இந்த நிகழ்வு எந்த விமானத்தில் நடந்தது என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால், இந்தப் பெண்ணுக்குப் பின்னால் நிற்பவர்கள் இந்தியப் பயணிகளைப்போல தெரிகிறது.

View post on Instagram