ஈராண்டுகளாகக் காணாமற்போன மாது ஜப்பானில் மாண்டது உறுதி

1 mins read
52bec690-549f-42d4-b88a-f4a34c82f16c
காணாமற்போன பெட்ரி‌ஷியா வூ-முராட் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: Help Find Pattie / ஃபேஸ்புக்

ஈராண்டுகளுக்கும் மேல் காணாமற்போன மாது ஒருவர் ஜப்பானில் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரி‌ஷியா வூ-முராட் எனும் அந்த மாது, ஹைக்கிங் எனப்படும் கரடுமுரடான இயற்கைச் சூழலில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட ஜப்பானின் நாரா நகரில் இருக்கும் விருந்தினர் இல்லத்திலிருந்து புறப்பட்டார். அதற்குப் பிறகு அவர் ஈராண்டுகளுக்கும் மேலாகக் காணாமற்போனார்.

தம் மனைவி உயிரிழந்தது இம்மாதம் ஒன்பதாம் தேதி அவரது குடும்பத்தாரிடம் உறுதிப்படுத்தப்பட்டதாக திரு கர்க் முராட் தெரிவித்தார். திரு கர்க் முராட், முன்னாள் சிங்கப்பூர்ப் பெண்கள் கூடைப்பந்துப் பயிற்றுவிப்பாளராவார்.

தைவானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான திருவாட்டி வூ-முராட்டை அவரக்கு நெருக்கமானாவர்கள் பேட்டி என்று அழைத்தனர். அவர் காணாமற்போனதாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்