வீட்டைப் பொத்துக்கொண்டு விழுந்த பாறாங்கல்; நூலிழையில் உயிர்தப்பிய பெண்

வீட்டைப் பொத்துக்கொண்டு விழுந்த பாறாங்கல்; நூலிழையில் உயிர்தப்பிய பெண்

1 mins read
1e37e913-e822-4e8b-a4c6-7384e14d10f4
சில அடி தூரம் தள்ளியிருந்ததால் பெண் உயிர்பிழைத்தார். காணொளிப்படம்: டுவிட்டர்/மேக்ஸ் ரோட்ரிகெஸ் -

பெரும் பாறாங்கல் ஒன்று வீட்டுக்குள் விழுந்து உள்ளிருந்தவற்றை நொறுக்க, பெண் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.

ஹவாயி தீவின் பாவ்லோ பள்ளத்தாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

வீட்டின் வசிப்பறையில் அந்தப் பெண் நடந்துகொண்டிருப்பதை அக்காணொளி காட்டுகிறது. அப்போது, திடீரெனப் பேரோசையுடன் பெரும் பாறாங்கல் ஒன்று சுவரை உடைத்துக்கொண்டு வீட்டினுள் விழுந்து, நொறுக்கித் தள்ளியது.

சில அடி தூரம் தள்ளி இருந்ததால் அப்பெண் உயிர்பிழைத்தார்.

மேக்ஸ் ரோட்ரிகெஸ் எனும் செய்தியாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் அக்காணொளியைப் பதிவிட்டுள்ளார். மில்லியன் பேருக்குமேல் பார்க்கப்பட்ட இக்காணொளி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்தப் பாறாங்கல் எங்கிருந்து விழுந்தது என்பது தெரியவில்லை.