பிரதமர் பதவிக்குப் பெண்; தென்கொரிய அதிபர் முடிவு

பிரதமர் பதவிக்குப் பெண்; தென்கொரிய அதிபர் முடிவு

1 mins read
2359e5d9-1469-4c28-bad8-5617c3164e98
திருவாட்டி ஹன் சியோங்சூக். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சோல்: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், நாட்டின் பிரதமராக திருவாட்டி ஹன் சியோங்சூக்கைத் தேர்தெடுத்துள்ளார்.

அதிபர் லீயின் முடிவை நாடாளுமன்றம் ஆதரித்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியப் பிரதமர் பொறுப்பை ஒரு பெண் ஏற்பார்.

தற்போது திருவாட்டி ஹன், தென்கொரியாவின் சிறு, நடுத்தர வர்த்தகங்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான அமைச்சராக உள்ளார்.

அமைச்சராகத் தேர்தெடுக்கப்படுவதற்கு முன்னர் திருவாட்டி ஹன், நேவர் என்னும் பெரிய இணைய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.

பிரதமராக ஹன் பொறுப்பேற்றால் தென்கொரியாவின் செயற்கை நுண்ணறிவு உருமாற்றத்தை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் ஊழியரணித் தலைவர் காங் ஹூன்-சிக்கும் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஹன், நாட்டின் பொருளியல் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திறமை கொண்டவர்,” என்று அவர் கூறினார்.

தென்கொரியாவின் அதிபர்ஆட்சி முறையில், பிரதமரின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானதாகவும் நிர்வாக ரீதியானதாகவும் மட்டுமே இருக்கும்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாஅதிபர்பிரதமர்