குடும்பத்தாரோடு பிரேசிலுக்கு விடுமுறைப் பயணம் மேற்கொண்ட பாவ்லா என்ற பெண், கடற்கரை வியாபாரி ஒருவரிடமிருந்து மூன்று மீன்களை வாங்கினார்.
மீன்களைச் சுத்தம் செய்துவிட்டு நெருப்பில் வாட்டுவதற்காக வைத்தபோது ஒன்றின் பற்களைக் கண்டு திகைத்துப் போனார் அவர்.
அந்தப் பற்கள் மனிதப் பற்கள் போன்று இருந்தன!
தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சியைப் பின்னர் பாவ்லா சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.
விசித்திரமாகவும் அச்சுறுத்துவதாகவும் அமைந்த அவரது அனுபவம், இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றது.
அதற்குப் பிறகு தமக்குச் சாப்பிடக்கூட தோன்றவில்லை என்றார் பாவ்லா.
இந்நிலையில், பாவ்லாவின் குடும்பத்தார் மீனை நெருப்பில் வாட்டி அதைச் சாப்பிட்டனர். வழக்கத்தைவிட மீன் இன்னும் ருசியாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
மனிதப் பற்கள் போன்றிருந்ததால் பாவ்லாவால் மீனைச் சாப்பிட முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய மீன், சிப்பிகளை உணவாக உட்கொள்வதால் அவற்றுக்கு ஏற்ப இதுபோன்ற பற்களைக் கொண்டிருப்பதாகக் கடல்வாழ் உயிரியல் நிபுணர் ஜோயேயோ கஸ்பரணி விளக்கினார். இவ்வகை மீன்கள் 35 அங்குலம் வரை வளரக்கூடும் என்றும் கிட்டத்தட்ட 16 கிலோ வரை எடை கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.