காட்டுக்குள் காணாமல் போன பெண் 5 நாள் பழரசம் குடித்து உயிர்தப்பினார்

காட்டுக்குள் காணாமல் போன பெண் 5 நாள் பழரசம் குடித்து உயிர்தப்பினார்

1 mins read
a241d400-8bf4-4165-a285-c64e97cf7b32
படம்: பிக்சாபே -

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதிக்குள் காணாமல் போன 48 வயது பெண், 5 நாள்களுக்கு லாலி பாப் மிட்டாய்களையும் ஒரு போத்தல் பழரசமும் குடித்து உயிர்வாழ்ந்துள்ளார்.

லில்லியன் இப் என்னும் அந்த பெண் ஏப்ரல் 30ஆம் தேதி விக்டோரியா மாநிலத்தில் ஒரு சிறு காட்டுப் பயணம் மேற்கொண்டார்.

ஒரு இடத்தில் தவறுதலாக அவர் வழிமாறிச் சென்றார். வாகனமும் சேற்றில் சிக்கிக்கொண்டது.

மது குடிக்கும் பழக்கம் இல்லாத லில்லியன் தமது காரில் தன் நண்பருக்கு பரிசாகக் கொடுக்க வைத்திருந்த பழரசத்தைப் பசிக்காகக் குடிக்கத் தொடங்கினார்.

ஐந்து இரவுகள் கடந்த பின்னர் தேடுதல் பணியில் இருந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை லில்லியனைக் கண்டுபிடித்தனர்.

காருக்குள்ளே தனக்கு மரணம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து கொண்டிரு ந்ததாக லில்லியன் கூறினார். ஐந்தாவது நாள் தாம் மிகவும் சோர்ந்து சிரமப்பட்டதாக அவர் கூறினார்.

நகர எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் லில்லியன் இருந்தார். உடல் நலப்பிரச்சினைகள் இருந்ததால் அவரால் நடக்கமுடியவில்லை.

லில்லியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்