கடன் பிரச்சினை: சூடான சூப்பை முகத்தில் ஊற்றிய பெண்

கடன் பிரச்சினை: சூடான சூப்பை முகத்தில் ஊற்றிய பெண்

1 mins read
d6f41c48-abc6-4dda-9bef-e6a82c7aa0da
படம்: BAO LIAO COMMUNE/FACEBOOK -

தைவானில் கடன் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் மற்றொரு பெண் மீது சூடான சூப்பை முகத்தில் ஊற்றி காயம் விளைவித்துள்ளார்.

சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) காலை ஒரு கரோவோக்கே நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடனாக வாங்கிய 870 வெள்ளியை திருப்பிக் கொடுக்காததால் அடிதடி நடந்ததாக நம்பப்படுகிறது.

சண்டை தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காணொளியில் வெள்ளை நிற ஆடையில் இருந்த பெண்ணும் சாம்பல் நிற ஆடையில் இருந்த பெண்ணும் அடித்துக்கொண்டனர். அந்த சண்டையை ஓர் ஆண் வேடிக்கைப் பார்ப்பதும் பதிவானது.

சண்டைக்கு நடுவே இன்னொரு ஆடவர் வெள்ளை நிற ஆடையில் இருக்கும் பெண்ணைத் தாக்கத் தொடங்கினார். பின்னர் சாம்பல் நிற ஆடையில் இருந்த பெண் சூடான சூப்பை எடுத்து வெள்ளை நிற ஆடையில் இருந்த பெண் மீது ஊற்றினார்.

காயத்தால் கதறிய பெண்ணை மேலும் மேலும் சாம்பல் நிற ஆடையில் இருந்த பெண் தாக்கினார்.

சம்பவத்தை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

காயமடைந்த பெண் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்