லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை

லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை

1 mins read
0d620b26-52ed-4448-8b48-09f78a91072e
‘ஒத்த சொல்லால’ பாடலுடன் அமைந்த பெண்ணின் காணொளி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. - படங்கள்: இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

கட்டம் போட்ட நீலநிற லுங்கி, அதற்கு மேலே டீ-சட்டை, கண்களில் கறுப்புக் கண்ணாடி.

ஆனால், இவற்றை அணிந்திருந்தவர் ஒரு பெண்.

அண்மையில், லுங்கி அணிந்தவாறு லண்டன் தெருக்களில் பவனி வந்த வெலரி, அதைக் காட்டும் காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்தார்.

அதையடுத்து, வெலரியின் துணிச்சலை இணையவாசிகள் பாராட்டித் தள்ளினர்.

ஒருவர் அணியும் ஆடை, அவரின் கலாசார அடையாளத்தின் வெளிப்பாடு எனலாம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பு அமைவதில்லை.

இருப்பினும், தனது தென்னிந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக லண்டனில் பல ஆண்டுகளாக வசித்துவரும் வெலரி செய்த இந்தச் செயல், சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வகையில் அவரின் செயல் அமைந்துள்ளதாகவும் இணையவாசிகள் கூறினர்.

View post on Instagram
 

இதுவரை ஒரு மில்லியன் பார்வைகளை இந்தக் காணொளி பெற்றுவிட்டது.

குறிப்புச் சொற்கள்
லண்டன்காணொளிஆடைஇணையம்