வாஷிங்டன்: 2025ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய எண் ‘67’. இந்த எண் பதின்ம வயது இளையர்களிடையே மிகவும் பிரபலம்.
ஏன் இந்த எண் இவ்வளவு பிரபலமாக உள்ளது எனப் புரியாமல் பெற்றோர் முதல் ஆசிரியர்கள் குழம்பினர். இந்நிலையில் ‘67’ இவ்வாண்டுக்கான சொல்லாக டிக்ஷனரி.காம் அறிவித்துள்ளது.
‘67’ஐ எண்ணாகக் குறிப்பிடாமல் ‘சிக்ஸ் செவன்’ என்று சொல்லாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
‘சிக்ஸ் செவன்’ (67) சொல் ‘டூட் டூட்’ (Doot Doot) என்ற பாடலில் வருகிறது. அந்தப் பாடலை அமெரிக்க சொல்லிசைப் பாடகர் ஸ்கிரில்லா பாடினார்.
இந்தப் பாடலில் வரும் ‘சிக்ஸ் செவன்’ பள்ளிகளிலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சொல் பல இடங்களில் நிலைமைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தப்படுகிறது.
Broligarchy, Gen Z stare உள்ளிட்ட சொற்களும் இவ்வாண்டின் சொல்லுக்கான போட்டியில் இருந்தன.

