ஹனோயில் ஐந்து மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் தொடக்கம்

ஹனோயில் ஐந்து மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் தொடக்கம்

1 mins read
7128be86-63d0-46ba-a907-1741a6f6bb21
ஹனோயில் தற்போது இரண்டு மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

ஹோ சி மின் சிட்டி: வியட்னாம் தலைநகர் ஹனோய், ஐந்து புதிய மெட்ரோ ரயில் பாதைகளின் கட்டுமானப் பணிகளைத் திங்கட்கிழமை (ஜூன் 22) தொடங்கியுள்ளது.

கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பொதுப் போக்குவரத்தைச் சுற்றிய நகர்ப்புற வளர்ச்சியை மாற்றி அமைக்கவும் ஹனோய் முயன்றுவருகிறது.

இது அந்நகரத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நகர்ப்புற ரயில் முதலீட்டுத் திட்டமாகும்.

அந்த ஐந்து ரயில் பாதைகளையும் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டம் உள்ளது. 300 கிலோமீட்டருக்கும் மேல் நீளமான அந்தப் பாதைகளுக்கான முதற்கட்ட முதலீடு 1,315 டிரில்லியன் டாங்கிற்கும் ($64.6 பில்லியன்) அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் திட்டங்கள் வியட்னாமின் பொது முதலீட்டுக் கட்டமைப்பின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் திட்ட உரிமையாளராக ‘ஹனோய் மெட்ரோபாலிட்டன் ரயில்வே மேலாண்மை வாரியம்’ நியமிக்கப்பட்டுள்ளது.

வியட்னாமின் மிகப்பெரிய தனியார் கூட்டுநிறுவனமான ‘வின்குரூப்’இன் கீழ் இயங்கும் ‘வின்ஹோம்ஸ்-வின்ஸ்பீடு’ (Vinhomes-VinSpeed) கூட்டமைப்பு, அதற்கான பொறியியல், கொள்முதல், கட்டுமான ஒப்பந்ததாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, உள்ளூர் வரவுசெலவு மூலதனம், சலுகைக் கடன்கள், உள்ளூர் அரசுப் பத்திரங்கள், ஹனோய், ஹோ சி மின் சிட்டியில் உள்ள நகர்ப்புற ரயில்வே மேம்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு வழிமுறைகளின்கீழ் உள்ள பிற சட்டபூர்வமான நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட பல வழிகளிலிருந்து அந்த நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்ஹனோய்ரயில்