அடுத்த ஈராண்டுகளுக்கு இந்தோனீசியப் பொருளியல் சீரான வளர்ச்சி

அடுத்த ஈராண்டுகளுக்கு இந்தோனீசியப் பொருளியல் சீரான வளர்ச்சி

1 mins read
93859ac7-0503-4953-84f6-c1b82f453c4a
இந்தோனீசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பெரும் பலமாக இருப்பது குடும்பச் செலவுகளே. - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியப் பொருளியல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சீரான வளர்ச்சிபெறும் என்று உலக வங்கி திங்கட்கிழமை (ஜூன் 24) முன்னுரைத்துள்ளது.

இந்தோனீசியாவின் உள்நாட்டு தேவை, முதலீடுகள் மூலம் அது நடக்கும் என்று அது கூறியது. ஏற்றுமதி பலவீனமாக இருந்தாலும் தொடர் வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி குறிப்பிட்டது.

இந்தோனீசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பெரும் பலமாக இருப்பது குடும்பச் செலவுகளே. தேர்தல் தொடர்பான செலவுகளும் இவ்வாண்டு பொருளியலுக்கு உதவின.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தோனீசியப் பொருளியல் 5.11 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

வட்டி விகிதம் அதிகரிப்பு, உலகளாவிய அரசியல் போன்றவை பொருளியல் வளர்ச்சிக்கு இடையூறுகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் காரணங்களே ஏற்றுமதிக்கு சவால் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசிய அதிபராக வரும் அக்டோபர் மாதம் பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்கவுள்ளார். அவர் நாட்டின் பொருளியலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லவும் கடனைக் குறைக்கவும் பல நடவடிக்கைகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

நாட்டின் பொருளியல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் அவர் அதிக கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்