தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி

1 mins read
65104533-9af7-4514-aef0-b370cf8a7dae
படம்: ராய்ட்டர்ஸ் -

கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்­கைக்கு உலக வங்­கி­யின் முத­லீட்­டுப் பிரி­வான அனைத்­து­லக நிதி நிறு­வ­னம் 400 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் நிதி உதவி வழங்க இருக்­கிறது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இறக்­கு­மதி செய்ய இலங்­கைக்கு உதவி செய்­யும் நோக்­கில் இலங்­கைக்கு இந்த உத­விக்­க­ரம் நீட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் பணம் அனுப்­பும் சேவை­யி­லும் ஏற்­று­ம­தி­யி­லும் 30 விழுக்­காடு பங்கு வகிக்­கும் மூன்று தனி­யார் வங்­கி­க­ளி­டம் இந்த நிதி வழங்­கப்­படும்.

அந்த நிதி­யைக் கொண்டு அவை இலங்­கைக்கு மிக­வும் தேவை­யான மருந்­து­கள், உண­வுப்­பொ­ருள்­கள், உரம் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இறக்­கு­மதி செய்ய ஏற்­பாடு செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இலங்கையின் பொருளியல் கடந்த ஆண்டு 9.2 விழுக்காடு சுருங்கியது.

இவ்வாண்டு அது மேலும் 4.2 விழுக்காடு குறையும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. நிதியுதவியை இலங்கை வரவேற்றுள்ளது.