தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத உணவு விலை உயர்வு

1 mins read
3a37d89f-03c9-4dbc-bb3d-89e74a765a08
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெனீவா: உலகளவில் உணவு விலை கடந்த இரண்டரை ஆண்டு[Ϟ]களாக காணப்படாத விகிதத்தில் அதிகரித்துள்ளது.

மோசமான பருவநிலை, நாடு[Ϟ]களுக்கிடையிலான அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணமாக உணவு விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு (FAO) உருவாக்கிய உணவு விலைக் குறியீடு, 2023 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளது என வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) வெளியிடப்பட்ட தரவில் தெரிய வந்தது.

செப்டம்பரில் உலக உணவு விலை உயர்வு விகிதம், 2022 மார்ச் மாதத்துக்குப் பிறகு காணப்படாத அளவில் 3%ஆகப் பதிவானது. தானியங்கள், சர்க்கரை, இறைச்சி, பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்கள், காய்கறி எண்ணெய் போன்றவற்றின் விலை கருத்தில்கொள்ளப்பட்டு அந்த விகிதம் கணக்கிடப்பட்டது.

உக்ரேன் மீது ர‌ஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவு விலை உயர்வு விகிதம் 13 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்