ஹண்டா கிருமிப் பரவல் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஹண்டா கிருமிப் பரவல் முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

படம்: ஏஎஃப்பி

03 Jul 2026 - 9:54 am

1 mins read

ஜெனிவா: உயிர்க்கொல்லியான ஹண்டா கிருமிப் பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எம்வி ஹெண்டியஸ் என்னும் உல்லாசப் பயண சொகுசுக் கப்பலில் அந்தக் கிருமி பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து உலக அளவில் பீதி கிளம்பியது.

கப்பலில் இருந்தோரில் மூவர் உயிரிழந்தனர். 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டிருந்து கடைசி நபரும் கப்பலில் இருந்து வெளியேறிவிட்டார்.

அந்தக் கிருமிப் பரவல் தற்போது முடிவுக்கு வந்திருந்தாலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உல்லாசக் கப்பலில் நிகழ்ந்த சம்பவத்திலிருந்து புதிய கிருமி தொடர்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள அறிவியலாளர்களும் நிபுணர்களும் முயன்று வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய சுகாதார எச்சரிக்கையைத் தூண்டிய அந்த நிகழ்விலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள விஞ்ஞானிகளும் நிபுணர்களும் முயன்று வருவதால், நோய்ப்பரவல் இப்போது முடிவுக்கு வந்திருந்தாலும், அவர்களுக்கான பணி அதன் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுஉலக சுகாதார நிறுவனம்பரவல்