புதிய வரிவிதிப்பு: உலகத் தலைவர்கள் கருத்து

புதிய வரிவிதிப்பு: உலகத் தலைவர்கள் கருத்து

2 mins read
6588c1a4-1f43-4a52-83c0-0ef8c9be2dd1
அமெரிக்கப் பொருள்களுக்கு பதிலுக்குப் பதில் வரி விதிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப்பின் புதிய 10% வரி விதிப்பு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

“இந்த வரிவிதிப்புக்குப் பதிலடி தரும் வகையில் நாங்கள் போராடப்போகிறோம். எங்களது ஊழியர்களைப் பாதுகாப்பதுடன் ஜி7 நாடுகள் அமைப்பில் வலுவான பொருளியலைக் கட்டி எழுப்புவோம்,” என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

சீனா, அமெரிக்கா தனது அண்மைய வரிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தியதுடன், தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சபதம் செய்தது. உலகின் மிகப்பெரிய பொருளியல்களை, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உயர்த்தக்கூடிய ஒரு வர்த்தகப் போரில் தான் ஆழமாகச் சுழற்றப்போவதாகவும் அச்சுறுத்தியது.

பிரேசிலிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இருதரப்பு வர்த்தகத்தில், அமெரிக்கா மீது வரிவிதிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, இது நேர்மையற்ற வரிவிதிப்பு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

“புதிய வரிகளால் அமெரிக்க மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால், பதிலுக்குப் பதில் வரி என்பதை ஆதரிக்க மாட்டோர்ம். அவ்வாறு செய்வது விலைகளை அதிகரித்து வளர்ச்சியைக் குறைத்துவிடும்,” என்பது அவரது கருத்து.

தென்கொரிய அதிபர் ஹான் டக்-சூ கூறுகையில், இந்த வரி நெருக்கடியை வெற்றிகொள்ள ஆன அனைத்தையும் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்கலே, அமெரிக்காவுடன் தமது நாட்டுக்கான உறவு வலுவாக உள்ளது என்றும் புதிய வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை நியூசிலாந்து ஏற்றுமதியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆதரவுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்பானிய பிரதமர் பெட்டோ சாஞ்செஸ் கூறுகையில், எங்களது நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் தொடர்ந்து பாதுகாப்போம் என்றார்.

வர்த்தகப் போரைத் தவிர்க்க தமது நாடு லட்சியம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

இதேபோல, புதிய வரிவிதிப்பால் பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
உலகத் தலைவர்அமெரிக்காவரி