கார் பதிவெண்ணை $20 மில்லியனுக்கு வாங்கிய செல்வந்தர்

1 mins read
4dc5723f-f6ab-4d14-85ce-721454666c90
படம்: TWITTER/@EMIRATESAUCTION -

துபாயில் கார் பதிவெண் ஒன்றைக் கிட்டத்தட்ட 20 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளார் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த செல்வந்தர்.

அரிய வகை கார் பதிவெண் என்று சொல்லப்படும் P 7 என்ற அந்த எண் சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது.

எண்ணை யார் வாங்கினார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஏலத்தில் கிடைத்த தொகை துபாய் அரசர் ‌ஷேக் முகம்மது பின் ர‌ஷித்தின் உலக உணவு நிதி திரட்டுத் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.

நன்கொடைகளை அதிகமாக ஈர்க்க ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் அரிய வகை வாகனப் பதிவெண்கள் ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் தங்களது செல்வத்தைக் காட்ட செல்வந்தர்கள் பலர் பல மில்லியன் டாலர் செலவு செய்து பதிவெண்களை வாங்குவார்கள்.

கடந்த 2008ஆம் ஆண்டு வாகனப் பதிவெண் 1ஐக் கிட்டத்தட்ட 19 மில்லியன் வெள்ளிக்கு ஏலம் எடுத்தார் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த சயித் அப்துல் கஃபார் கோரி.

குறிப்புச் சொற்கள்